ஆப்நகரம்

மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கினார் ஜெ.,

மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

TNN 1 Jun 2016, 3:02 pm
சென்னை: மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
Samayam Tamil tn cm gave uniforms textbooks and notebooks
மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கினார் ஜெ.,


நடப்பு கல்வியாண்டில், பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 90 லட்சம் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 77 லட்சம் மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு இணைச் சீருடை ஆகியவற்றை வழங்கிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.



அதன்படி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்களும், 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு நான்கு இணைச் சீருடைகளும் வழங்கும் திட்டங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பெஞ்சமின், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி