ஆப்நகரம்

அடடே புதுசா 2, மொத்தமா 11; குவியும் அரசு மருத்துவ கல்லூரிகள்- தேங்ஸ் டூ மோடி!

தமிழகத்தில் புதிதாக இரண்டு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jan 2020, 8:05 am
தமிழகத்தில் கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று கள்ளக்குறிச்சி. இதேபோல் கடந்த 2001ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது அரியலூர் மாவட்டம்.
Samayam Tamil Edappadi K Palaniswami


இந்த இரண்டு மாவட்டங்களிலும் இரண்டு புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 60 சதவீத நிதியை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. எஞ்சிய 40 சதவித நிதியை மாநில அரசு அளிக்கும்.

இதன்மூலம் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

ஆச்சரியமாய் சரிந்த வெங்காயத்தின் விலை - இல்லத்தரசிகள் செம ஹேப்பி!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நேரத்தில் தமிழகத்திற்கு இரண்டு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு மிக்க நன்றி. ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை.

இதற்காக 3,575 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2,145 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவுள்ளது. அதில் தமிழக அரசின் பங்களிப்பாக 1,430 கோடி ரூபாய் இருக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

மேட்டூர் அணையில் இருந்து இனி தண்ணீர் கிடையாது!

இதனைத் தொடர்ந்து நவம்பரில் திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் 150 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்று வல்லுநர்கள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளால் மருத்துவ கல்விக்கான போட்டி ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு உயர்தர சிகிச்சைகளை அந்தந்த மாவட்டங்களிலேயே அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி