ஆப்நகரம்

கோவில்களில் சுதந்திர தின சிறப்பு விருந்து! முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 449 கோவில்களில் நடந்த சுதந்திர தின சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Samayam Tamil 15 Aug 2018, 3:16 pm
தமிழகம் முழுவதும் 449 கோவில்களில் நடந்த சுதந்திர தின சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
Samayam Tamil annadhanam


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய சுதந்திரத் திருநாள் அன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து திருக்கோயில்களில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இன்று 449 திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொள்ளும் சேவார்த்திகளுக்கு திருக்கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது. மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சென்னை பெருநகரப் பகுதிகளில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் சட்டமன்ற தலைவர் தனபால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.
திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோவிலில் பேரவை தலைவர் தனபாலும், கே.கே நகர் சக்தி விநாயகர் கோயிலில் முதல்வர் பழனிசாமியும், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். மேலும், மற்ற அமைச்சர்களும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி