ஆப்நகரம்

பிரதமருடன் முதல்வர் இன்று மாலை சந்திப்பு

பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

TNN 27 Feb 2017, 5:04 am
புதுதில்லி: பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
Samayam Tamil tn cm will meet pm modi today evening
பிரதமருடன் முதல்வர் இன்று மாலை சந்திப்பு


தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடையே பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை இன்று மாலை சுமார் 5.45 மணியளவில் சந்திக்கவுள்ளார். அதற்காக நேற்றிரவே அவர் விமானம் மூலம் தில்லி சென்று விட்டார். அவருடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகளும் தில்லி சென்றுள்ளதாக தெரிகிறது.

பிரதமருடனான சந்திப்பின் போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது. தமிழகத்துக்கு உடனடியாக வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தவுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் தனது பயணத்தை முடித்துக் கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை மீண்டும் தமிழகம் திரும்புவார் என தெரிகிறது.
TN CM will meet PM Modi today evening

அடுத்த செய்தி