ஆப்நகரம்

தில்லி சென்றார் தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்

உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தில்லி சென்றார்.

TNN 24 Sep 2016, 1:50 am
சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தில்லி சென்றார்.
Samayam Tamil tn congress chief went to delhi
தில்லி சென்றார் தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்


உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல் கட்டமாக மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ஜி.கே.வாசன், அடுத்து திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவுள்ளார்.

காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியில் பங்கேற்பதற்கு எங்களுக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை என தமாகா அறிவித்துள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறுவதை காங்கிரஸார் விரும்பவில்லை.

இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இடங்களை எந்த அடிப்படையில் பிரித்துக் கொள்வது உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் திருநாவுக்கரசரும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் கூட்டணி விவகாரம், திமுக-வுடன் தமாகா சந்திப்பு, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தில்லி சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டு சென்ற அவர், காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திக்க செல்கிறேன் என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரை திருநாவுக்கரசர் சந்திக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி