ஆப்நகரம்

தேர்தல் வரை காத்திருந்த ஈபிஎஸ்: வீட்டுக்கு சென்று நேரில் சந்தித்த ஓபிஎஸ்-என்ன பேசினார்கள்!

மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ள முதல்வர் பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

Samayam Tamil 23 Apr 2021, 3:02 pm

ஹைலைட்ஸ்:

  • சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் பழனிசாமியை ஓபிஎஸ் நேரில் சந்தித்தார்
  • அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அவர்கள் இருவரும் நீண்ட ஆலோசனை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றதால் தேர்தல் முடிந்த பிறகு அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க சிகிச்சையை லேப்ரோஸ்கோபி முறையில் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்தனர்.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கடந்த 20ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை வீட்டிலேயே 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் முதல்வர் பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்தார். அப்போது, தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்ததாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் வெற்றிக் கணிப்பு: அறிவாலயத்துக்கு விசிட்... ரவுண்டு கட்டிய எடப்பாடி!
தேர்தலுக்கு பின்னர் தன்னுடைய வட்டாரங்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி சில கருத்துக் கணிப்புகளை நடத்தி மூன்று விதமான ரிப்போர்ட்டுகளை தனது கையில் வைத்துள்ளார். அதேபோல், தென் மாவட்ட நிலவரங்கள் உள்பட மாநிலம் முழுவதும் சில கருத்துக் கணிப்புகளை எடுத்து ஓபிஎஸ் தனது கையில் வைத்துள்ளார். இந்த அறிக்கைகளை வைத்துக் கொண்டு அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அவர்கள் இருவரும் அப்போது நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி