ஆப்நகரம்

தமிழக அரசு மருத்துவர்கள் ஸ்ட்ரைக் நாளை தொடக்கம்

தமிழகத்தில் உள்ள சுமார் 6000 மருத்துவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்க உள்ளனர்.

Samayam Tamil 5 Jul 2018, 7:06 pm
தமிழகத்தில் உள்ள சுமார் 6000 மருத்துவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்க உள்ளனர்.
Samayam Tamil 64868479


முறையான ஊதிய வழங்குவதை வலியுறுத்தி தமிழகத்தின் சேவை மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் அமைப்பு நாளை முதல் வேலை நிறுத்தம் செய்வதா அறிவித்துள்ளது.

“1988ஆம் ஆண்டு முதல் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போராடி வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்தது. ஆனால் இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. வேறு வழி இல்லாமல் வேலை நிறுத்தம் செய்ய முடிவுசெய்துள்ளோம்” என்று அந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ராமலிங்கம் கூறியுள்ளார்.

இந்த வேலை நிறுத்ததிற்கு ஆதரவு தருமாறு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்புக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்துவந்த மூன்று மருத்துவர்கள் உடல்நிலை மோசமான நிலையில் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி