ஆப்நகரம்

ஆய்வக உதவியாளர்களை இரண்டு மடங்காக உயர்த்த தமிழக அரசு திட்டம்!

சென்னை: தமிழகத்தில் முதன்மை சுகாதார மையங்களில் உள்ள ஆய்வக உதவியாளர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த, திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Oct 2018, 1:18 am
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள முதன்மை சுகாதார மையங்களில் உள்ள ஆய்வக உதவியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வரை தமிழக அரசு காண்டிராக்ட் முறையில் தனியார் நிறுவனத்திடம் இப்பணியை ஒப்படைத்துள்ளது.
Samayam Tamil 2


இந்நிலையில் தமிழக அரசே நேரடியாக ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. அதில் முதற்கட்டமாக தேர்வானவர்களுக்கான பணி நியமன உத்தரவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வழங்கினார்.

இவர்கள் சுகாதார மையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள், மற்றும் காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சோதனை செய்வர்கள். எதிர்காலத்தில் இவர்களின் எண்ணிக்கை 687 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், ‘ஆய்வக உதவியாளர்களின் எண்ண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இன்னும் 200க்கும் மேற்பட்டோர்களை கூடுதலாக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ‘ என்றார்.

அடுத்த செய்தி