ஆப்நகரம்

Tamil Nadu Rains: சாதாரண மழையில்லை; பெருமழை கொட்டித் தீர்க்கப் போகுது - தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்!

தமிழகம் மற்றும் கேரளாவில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.

Samayam Tamil 17 Jul 2019, 12:20 pm
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இது தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் மக்களுக்கு சற்றே ஆறுதலை தந்துள்ளது.
Samayam Tamil TN Rains


இருப்பினும் முழுமையான தீர்வாக அமையவில்லை. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், மிகப்பெரிய தாகத்தில் தமிழகம் தவித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் வானிலை குறித்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

தமிழகத்தில் நேற்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புண்டு. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரும் வியாழன் முதல் மிகக் கனமழை பெய்யும்.

இது வரும் திங்கட்கிழமை வரை தொடரும். கடந்த முறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, பெருமழை பெய்யும். வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கேரள மாநிலத்தில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

Chennai Weather Report: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மூணாறு, சபரிமலை, தேக்கடி செல்ல யாராவது திட்டமிட்டிருந்தால், அங்குள்ள வானிலை நிலவரத்தை முதலில் தெரிந்து கொள்ளவும். இந்த பெரு மழை தற்போது மிக அவசியம். தமிழகம் மற்றும் கேரளாவில் மிகக் குறைந்த பருவமழையே பெய்துள்ளது.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர கூடுதல் ரயில்!

வரும் நாட்களில் பருவ மழை போதிய நீரை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு – தேர்தல் ஆணையம்!

அடுத்த செய்தி