ஆப்நகரம்

அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு: தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Samayam Tamil 17 Oct 2019, 8:26 pm
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil tn govt


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 12 சதவீதத்திலிருந்து மேலும் 5 சதவீதம் அதிகரித்து கடந்த 9ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவு 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். இதுவரை மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வில் இதுதான் அதிகம். இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.16,000 கோடி செலவாகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு தயாராகிய பட்டாசு பரிசு பெட்டிகள்..! துணி வாங்கும்போது மறந்துடாதீங்க..

இந்ந்லையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!

தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்கனவே 12 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வேண்டும்: பா.ம.க. ராமதாஸ் அறிக்கை!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசும் அறிவித்துள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி