ஆப்நகரம்

பேருந்துக்குள் குடை பிடிக்கும் மக்கள்; அரசு பேருந்தின் மகிமை

அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால், பேருந்துகளுக்கு உள்ளேயும் பொதுமக்கள் குடைபிடித்தபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

TNN 12 Oct 2017, 2:59 pm
அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால், பேருந்துகளுக்கு உள்ளேயும் பொதுமக்கள் குடைபிடித்தபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil tn government bus should maintain properly
பேருந்துக்குள் குடை பிடிக்கும் மக்கள்; அரசு பேருந்தின் மகிமை

தேனி மாவட்ட்ம் பெரியகுளத்திலிருந்து உள்ளூர் வெளியூர் என 72 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் அதிகபட்சமாக 15 பேருந்தகள் மட்டுமே, சரியான முறையில் உள்ளது. மீதம் உள்ள அனைத்து பேருந்துகளிலும், மழை பெய்யும் போது, பஸ் உள்ளேயும் நீர் ஒழுகி வருகிறது.

வெளியே இருப்பதும் பேருந்துக்கு உள்ளே இருப்பதும் இரண்டும் ஒரே மாதிரியான மழை பெய்வதால், பயணிகள் அனைவரும் புலம்பியபடியே, குடையை விரிக்க வேண்டி சூழல் உருவாகியுள்ளது.

பேருந்து ஓட்டுனர் நடத்துனர்கள் முதற்கொண்டு, மழை நீரில் நனைந்த படியே பஸ்சை இயக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படுகிறது. அவ்வாறு தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் இதை முறையாக தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி