ஆப்நகரம்

தமிழ்நாட்டில் ஆயிரத்து 706 ஆசிரியர் பணியிடங்கள் ரத்து!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பப்பட வேண்டிய ஆயிரத்து 706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவைப் பிறபித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Jan 2020, 8:09 pm
தமிழ்நாட்டில் சமீப ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. தரமான கல்வி அரசுப் பள்ளிக் கூடங்களில் கிடைக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
Samayam Tamil 72898957


இதைக் காரணம் விரைவில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு, கல்வித் துறை முழுவதுமாக தனியார் மயமாக்கப்படும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப் படுத்தும் வழியிலே தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடந்து கொள்கிறது.

கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான பள்ளிகளை மூடிய தமிழ்நாடு அரசு தொடர்ந்து அரசு ஆசியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது புதிய அறிவிப்பு ஒன்றைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

5, 8 பொதுத் தேர்வில் இத மட்டும் செய்யாதீங்க என ஆசிரியர்கள்!

சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமலிருக்கும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் தொடர்பான தகவலைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.

அதைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமலிருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆயிரத்து 706 என்பது கண்டறியப்பட்டது.

“தமிழ்நாடு தீவிரவாதிகள் கூடாரம், காலரைத் தூக்கி விடுங்க” பொன்னர் சர்ச்சை பேச்சு!

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், “அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமலிருக்கும் ஆயிரத்து 706 காலி பணியிடங்களை ரத்து செய்யப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் இனி ஆசிரியர் தேர்வு நடத்தப்படாது என்பது இந்த உத்தரவின் மூலம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

அடுத்த செய்தி