ஆப்நகரம்

இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.3,000: அவர்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் முதல்வரே?

வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்

Samayam Tamil 2 Jul 2020, 7:00 pm
சட்டப்படிப்பினை முடிந்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர் ஒருவர், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவில் வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்பின்னர் இளநிலை வாக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கிராமப்புறங்கள் மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், இதனை கருத்தில் கொண்டு ஏழ்மையான மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞர்களாக பணியாற்ற 3 ஆண்டுகள் தேவைப்படுவதால், வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதி உதவி வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கில்லாத தமிழ்நாடு... கவலை தெரிவிக்கும் ஸ்டாலின்

அத்துடன், வழக்கறிஞர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு அதிமுக என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நல உதவிகள் குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், லட்சக்கணக்கான மாணவர்கள் வேறு பல படிப்புகளை படித்து அவர்களது வாழ்க்கையில் நிலையான இடத்துக்கு வர போராடிக் கொண்டிருக்கும் வேளையில், சட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம். அதுவும் பொதுக் கருவூலத்தில் இருந்து பெருமளவிலான நிதி அவர்களுக்கு மட்டும் ஏன் வழங்கப்பட வேண்டும் என்று அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி