ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல் - தமிழ்நாடு அரசு விளக்கம்!

மகப்பேறு விடுப்பு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது

Samayam Tamil 10 May 2022, 12:03 pm
தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக கடந்த 2016ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்டது. இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன் தொடர்ச்சியாக, கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதாவது 365 நாட்களாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதனிடையே, மகப்பேறு விடுப்பு தொடர்பான பல்வேறு சந்தேகங்களும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மகப்பேறு விடுப்பு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
MK Stalin ஸ்டாலின் களமிறக்கிய ஸ்பெஷல் டீம்: கைக்கு போன ரிப்போர்ட்!
அதன்படி, குழந்தை பிறந்து இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும், பிறந்து சிறிது காலம் கழித்து இறந்தாலும் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அடுத்த செய்தி