ஆப்நகரம்

புதிய பணியிடங்களுக்கு தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை ஏற்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

Samayam Tamil 21 May 2020, 6:17 pm
சென்னை: அரசு அலுவலங்களில் புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிக்கும் பொருட்டு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அரசு அலுவலங்களில் புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: டிக்கெட் கவுன்டர்களில் விரைவில் முன்பதிவு!

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அனைத்து அரசு அலுவலங்களிலும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும், பணியாளர் குழுவின் ஒப்புதலின் பேரில் கருணை அடிப்படையிலான தொடக்க நிலை பணியிடங்கள் உள்ளிட்ட ஏற்கனவே காலியான உள்ள பணியிடங்களாஇ நிரப்ப தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு அரசாணை


மேலும், பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்தால் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவைகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி தொடரும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி