ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி அடுத்தகட்டம், தயாநிதி மாறன் மீது அமைச்சர் அவதூறு வழக்கு!

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பிருக்கிறது என குற்றம்சாட்டிய திமுக எம்பி தயாநிதி மாறன, அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

Samayam Tamil 17 Feb 2020, 9:19 am
டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக நடக்கும் விசாரணைகள் பல்வேறு அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு வழக்குத் தொடர தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
Samayam Tamil 20200130_192258


தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்து வந்த மிகப் பெரிய முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த மோசடி சம்பவத்தில் அரசு அதிகாரிகள் சிலருக்கு முக்கியப் பங்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே போல் அதிகாரிகள் சிலரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படும் நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன், “டிஎன்பிஎஸ்சி முறைகேடு அமைச்சர் ஜெயக்குமாருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் அவரை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த சம்பவம் மாணவர்களின் கனவுகளைக் கேலிக்கூத்தாக்கும் விதத்தில் உள்ளது” என்றார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: விடைத்தாள்களை மாற்ற உதவியவர் கைது; அவிழும் முடிச்சுகள்!

திமுக எம்பியின் இந்த கருத்திற்குப் பதிலளித்த அமைச்சர், “அரசியலில் ஆதாயம் பெறுவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டைத் தயாநிதி மாறன் பேசுகிறார். இந்த பேச்சு குறித்து, அவர் மீது வழக்குத் தொடரப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த சூழலில் அமைச்சரை விமர்சித்தது குறித்து வழக்குத் தொடர தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை: ‘பட்டாக் கத்தியாலதான் கேக் வெட்டுவோம்’ - ரௌடி கும்பலை தூக்கிய போலீஸார்!

திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சனம் குறித்து அறிக்கை பெற்ற தமிழ்நாடு அரசு, எம்பி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அமைச்சர் தரப்பு ஓரிரு தினங்களில் நீதிமன்றத்தில் வாக்குத் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி