ஆப்நகரம்

நடிகர் சங்க தேர்தல் செல்லாது..! தமிழக அரசு அதிரடி

சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Oct 2019, 5:58 pm
கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்து நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கானது நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், விஷால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் வாதாடினார்.
Samayam Tamil 55


களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்துல் கலாமிற்கு உலக அமைதிக்கான பரிசு!

அப்போது அவர் கூறுகையில், கடந்த ஜுன் 23 ஆம் தேதி நடந்த தேர்தலில், 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என இவ்வாறு வாதிட்டார்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக, கடந்த 5ம் தேதி தமிழக அரசு, தற்போதைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறினார்.

பட்டாசு விவகாரம்: சொன்னது சொன்னதுதான்.. வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்..!

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில்... உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என தெரிவித்தார்.

தீபாவளிக்கு ‘பிகில்’ வெளியாதில் சிக்கல்? அட்லியை தொடரும் கதை திருட்டு புகார்!

மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். நடந்து முடிந்த தேர்தலுக்கு தொடர்ந்து சர்ச்சை எழுந்து வந்த நிலையில் இந்த விசாரணையானது புதிய திருப்பத்தை உண்டாக்கியுள்ளது.

அடுத்த செய்தி