ஆப்நகரம்

வெள்ள பாதிப்பை தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார்

மழை வெள்ளம் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 12 Aug 2018, 1:07 pm
மழை வெள்ளம் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil rb udhaya kumar


சென்னை எழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 'நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. வீட்டினுள் புகுந்த வெள்ள நீர் காரணமாக 276 பேர் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மேட்டூர் அணையிலிருந்து 1.13 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எனவே, காவிரி ஆறு செல்லும் 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக 1077 மற்றும் 1070 என்ற எண்கள் உள்ளது. பொதுமக்கள் வெள்ளப்பாதிப்புகளை குறித்து அவசர உதவிக்கு இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடும் போது அவற்றை வேடிக்கை பார்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது. மேலும், மழை வெள்ளம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் '

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி