ஆப்நகரம்

தொழிற்சாலைகள் இயங்க அனுமதித்த ஆணையை திரும்பப் பெற்றது தமிழக அரசு

13 வகையான தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்க அனுமதித்த ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது

Samayam Tamil 7 Apr 2020, 10:47 pm
சென்னை: தொழிற்சாலைகள் இயங்க அனுமதித்த ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதற்கான உத்தரவை தொழில் துறையின் முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுப்படுத்த வருகிற 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள், போக்குவரத்து, விவசாயம், மருந்து உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில்துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் அரசு, சமூக பரவல் நிலைக்கு கொரோனா சென்று விடாமல் தடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாக பொருளாதார ரீதியாக அரசு பாதிப்பை சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு

இதனிடையே, இரும்பு, சிமெண்ட், உரம், சர்க்கரை, காகிதம், கண்ணாடி, டயர், சாயத்தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி, தோல் பதனிடுதல் உள்ளிட்ட 13 தொழிற்சாலைகளின் இயக்கத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்து ஆனை வெளியிட்டது.

தொழில் துறை முதன்மை செயலர் உத்தரவு


இந்நிலையில், 13 தொழிற்சாலைகளின் இயக்கத்துக்கு அனுமதித்த ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதற்கான உத்தரவை தொழில் துறையின் முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார்.

அடுத்த செய்தி