ஆப்நகரம்

அரசு கல்லூரிகளில் சேர வேண்டுமா? அடிச்சுது ஜாக்பாட் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 11 Sep 2020, 9:47 am
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோனதால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கு போதிய பணம் செலவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உயர்கல்வி கற்பதற்காக கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து காத்திருப்போரின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் தனியார் கல்லூரிகளில் அதிகளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
Samayam Tamil TN Govt Colleges Admission


இதையொட்டி அரசு கல்லூரிகளில் பயில விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட இம்முறை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிகளுக்கு ஏற்ப கூடுதலாக 20 சதவீதமும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? -முதல்வர் விளக்கம்

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகளவில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

எனவே வழக்கத்தை விட கூடுதலாக 20 சதவீத மாணவர்களைச் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் உரிய அனுமதி பெற வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி