ஆப்நகரம்

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு!

பெட்ரோல். டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில், மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கு மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 16 Sep 2019, 2:17 pm
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு!


தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டார். அதன்படி 31.12.2022 வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும். மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட பாணியில் நீருக்கு மேலும் நீரில் முழ்கியும் செல்லும் கப்பல் வைரலாகும் புகைப்படம்

மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கு மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கெனவே, ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் சார்ஜர்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

பண்டிகை கால விற்பனை: டூ-வீலர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்த ஹோண்டா

இந்த நிலையில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று 74வது பிறந்த நாளைக் கொண்டாடும் ப.சிதம்பரத்திற்கு இப்படியொரு சோகம்!

அடுத்த செய்தி