ஆப்நகரம்

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

சென்னை: மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

TIMESOFINDIA.COM 16 Oct 2018, 3:30 pm
கடந்த ஓராண்டாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பதவி காலியாக இருந்து வந்துள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 4, 2017ல் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக இருந்த ராஜரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Samayam Tamil Advocate


இதையடுத்து கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞரான சி எமிலியாஸ், பொறுப்பு தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மேலும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக எமிலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், கடந்த நவம்பர் 8, 1978ல் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். இவர் 2005ல் மூத்த வழக்கறிஞராக பதவி உயர்வு பெற்றார்.

தனது 40 ஆண்டுகால அனுபவத்தில் நடராஜன் பல்வேறு குற்றவியல் வழக்குகளைக் கையாண்டுள்ளார். குறிப்பாக ஆட்டோ சங்கர் வழக்கு, எம்.எல்.ஏ எம்.கே பாலன் கொலை வழக்கு, தருமபுரி விவசாயக் கல்லூரி பேருந்து எரிக்கப்பட்ட வழக்கு, உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை உள்ளிட்டவை அடங்கும்.

TN govt appoints A Natarajan as public prosecutor in Madras HC.

அடுத்த செய்தி