ஆப்நகரம்

பேருந்து பயணிகளுக்கு வீக் எண்ட் ஹேப்பி நியூஸ்!!

சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு வார இறுதி நாட்களில் 20 சதவீதம் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக நிர்வாகம் (SETC) தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Sep 2020, 5:39 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் இறுதி வாரத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு தமிழகத்தில் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.
Samayam Tamil setc.


இந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவட்டங்களுக்கு இடையே செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டு கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து அரசு விரைவுப் பேருந்துகள், மாநகர பேருந்துகளில் மொத்தம் ஒரு கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் 10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (எஸ்இடிசி) நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் போக்குவரத்துக் கழகம், பேருந்துகள் நிறுத்தப்படுமா?

சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தற்போது மொத்தம் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் தேவையை கருதி, வார இறுதிநாட்களான வெள்ளி, சனிக்கிழமைகளில் 20 சதவீதம் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று எஸ்இடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் தற்போது சராசரியாக 3,500 பேர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதையடுத்து, பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி