ஆப்நகரம்

கொரோனா சிகிச்சை பெற இவ்வளவுதான் கட்டணம்: அரசு நிர்ணயம்!

தனியார் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக வசூலிக்க வேண்டிய கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 6 Jun 2020, 2:08 pm
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பிற மாவட்டங்கள் மெல்ல பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருபவர்களால் பாதிப்பு சற்று அதிகரிக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களின் நிலைதான் மிக மோசமாக உள்ளது.
Samayam Tamil tn govt fix the fees structure for corona treatment in private hospitals


ஆரம்பத்தில் பாதிப்பு குறைவாக இருந்தபோது கொரோனாவுக்கான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டதுடன் தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

தனியார் ஆய்வகங்களில் சோதனை செய்யும்போது அதிகளவிலான கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. தற்போது சிகிச்சை அளிப்பதிலும் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

கொரோனா: அடுத்த உச்சத்தை நோக்கி நகரும் சென்னை

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி இலவசமாக கொரோனா சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளலாம். இதை மீறும் மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு ரிசல்ட் எப்போது தெரியுமா? அமைச்சர் அறிவிப்பு!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது லேசான அறிகுறிகள் உள்ளவர்களில் கிரேடு ஏ 1 மற்றும் ஏ 2 பிரிவில் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 7,500 ரூபாயும், ஏ4, ஏ5 பிரிவினருக்கு 5000 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் நாள் ஒன்றுக்கு 15000 வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி