ஆப்நகரம்

செப்டம்பர் 14 இல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு?

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது. இதேபோன்று, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 5 Sep 2020, 11:16 pm
தமிழக அரசு அண்மையில் அறிவித்த நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அரசு அறிவித்திருந்தது.
Samayam Tamil schools


தற்போதைய நிலவரப்படி, இந்த ஆண்டு இறுதிவரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தி்ட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 'தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14 ஆம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டதை போல அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவு இதுதான்!

இதேபோன்று, திரையரங்குகளை மீண்டும் திறப்பு தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், 'தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும். இருக்கைகள் சமூக இடைவெளிவிட்டு இருக்க வேண்டும். தமிழகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் திறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் புறக்கணிப்பா? மத்திய அரசுக்கு டி.ஆர். கண்டனம்!!

பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த தகவல் பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, "பள்ளி. கல்லூரி, திரையரங்குகள் ஆகியவை திறக்கப்படுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் தவறானது. இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி