ஆப்நகரம்

வரதட்சணை கொடுமைக்கு இனி 10 வருஷம் ஜெயில்..! வருகிறது புதிய சட்டம்

வரதட்சணை கொடுமைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (செப்.16) அறிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Sep 2020, 4:10 pm
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை முதல்வர் சட்டப்பேரவையில் இன்று பட்டியலிட்டு பேசினார். அப்போது பேரவை விதி எண் 110 -ன் கீழ் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
Samayam Tamil tncm


வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தற்போது அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இதனை 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதேபோன்று, பெண்களைப் பின்தொடர்வது, குற்றமிழைப்பது ஆகியவற்றுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை ஏழு ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையா? தெறிக்க விட்ட முதல்வர்; கடுப்பான ஸ்டாலின்!

மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் தொழிலுக்காக விற்பது, வாங்குவது போன்ற குற்றங்களுக்கு தற்போது அதிகபட்சம் 10 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அடுத்த செய்தி