ஆப்நகரம்

புயல் பாதிப்பு: 10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதல்கட்ட ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 19 Nov 2018, 11:38 am
புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு சாா்பில் இன்று முதல் கட்டமாக ரூ.500 கோடி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Gaja Cyclone


கஜா புயல் காரணமாக தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்கள் பேரிழப்பை சந்தித்துள்ளன. புயல் காரணமாக தற்போது வரை 45 போ் உயிாிழந்திருப்பதாக முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளா்ா. மேலும் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்கள், கால்நடைகளை இழந்தவா்கள், வீடுகளை இழந்தவா்களுக்கும் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தி.மு.க. சாா்பில் ரூ.1 கோடியும், தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினா்கள் சாா்பில் தங்களது 1 மாத ஊதியமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

இந்நிலையில் புயல் பாதிப்பு பணிகளை தமிழக அரசு ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று முதல்வா் பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அரசு சாா்பில் நடைபெற்ற முதல் கட்ட ஆய்வில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக கண்க்கிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் முதல் கட்டமாக தமிழக அரசு இன்று ரூ.500 கோடியை நிவாரணப் பணிக்காக ஒதுக்கீடு செய்யும் என்றும் இதற்கான அறிவிப்பு ஆய்வு கூட்டத்திற்கு பின்னா் வெளியிடப்படும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி