ஆப்நகரம்

கஜானா காலியாகிவிட்டால் ராஜினாமா செய்யுங்க: அரசுக்கு சாட்டை அடி

நிதி நெருக்கடியை சரிசெய்ய முடியாவிட்டால், சரி செய்பவர்கள் வரட்டும் என்றும் தற்போதைய அரசு தேவையில்லை என்றும் போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Jan 2018, 6:41 pm
நிதி நெருக்கடியை சரிசெய்ய முடியாவிட்டால், சரி செய்பவர்கள் வரட்டும் என்றும் தற்போதைய அரசு தேவையில்லை என்றும் போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Samayam Tamil tn govt should resign tamilnadu transport employees
கஜானா காலியாகிவிட்டால் ராஜினாமா செய்யுங்க: அரசுக்கு சாட்டை அடி

சென்னை சிந்தாரிப்பேட்டையில் இன்று மாலை போக்குவரத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்கள், அரசுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்டிருந்தால் அதற்கு போக்குவரத்து ஊழியர்கள் காரணம் இல்லை என்றும் நாளை உயர்நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரசு கஜனாவில் தங்களுடைய 7 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாகவும், அதை தர வேண்டியது யாருடைய பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய சவுந்தரராஜன், தற்காலிக ஓட்டுனரால் விபத்துக்கள் தான் அதிகரிப்பதாகவும் தங்களது பிரச்னைகள் தீரும் வரை போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி