ஆப்நகரம்

1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யும் தமிழக அரசு!

பயணிகளின் பொதுப் பேருந்து சேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 30 Nov 2022, 5:37 pm
அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பயணிகளின் பொதுப் பேருந்து சேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும் மற்றும் 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திடவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil பேருந்துகளை கொள்முதல் செய்யும் தமிழக அரசு
பேருந்துகளை கொள்முதல் செய்யும் தமிழக அரசு


சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும் மற்றும் 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தினந்தோறும் வழங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், கோவிட் பெருந்தொற்றின் போது பெருமளவில் பாதிக்கப்பட்டன. பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை 2020-2021 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 70 இலட்சமாக குறைந்தது. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக சங்கர் ஐ.பி.எஸ் நியமனம்: பின்னணி என்ன?
அதன் பின்னர் பேருந்து சேவைகள் சீராக்கப்பட்ட பின்பு இது நாளொன்றுக்கு 1 கோடியே 70 இலட்சம் பயணிகளாக இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பயணிகளின் பொதுப் பேருந்து சேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும் மற்றும் 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திடவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும் மற்றும் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.130 கோடி மதிப்பீட்டில் அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திட அரசின் நிதியாக ரூ.80 கோடியும் எஞ்சிய ரூ.50 கோடியினை அந்தந்த போக்குவரத்துக் கழகங்களே ஏற்கவும் அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ரூ.420 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி