ஆப்நகரம்

ஓலா, ஊபருக்கு இணையாக 108 ஆம்புலன்ஸ் சேவை: அப்படி என்ன வசதி, நீங்களே பாருங்க!

108 ஆம்புலன்ஸ் சேவைக்காக புதிய ஆஃப் வெளியிடப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Feb 2020, 8:31 am
ஆபத்துக் காலங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அழைக்கும் போது உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்லமுடியும். சில இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தாமதமாக வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
Samayam Tamil 108 ஆம்புலன்ஸ் சேவை


இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஒட்டநத்தம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும், அங்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க அரசு முன்வருமா என்று திமுகவைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கேள்வி எழுப்பினார்.

மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒரு மணிநேரம் தாமதமாக வருவதாகவும், இதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Kanimozhi: மகத்தான மதிய உணவு திட்டத்திற்கா இப்படியொரு நிலை? கனிமொழி எம்.பி வேதனை!

இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நாள் ஒன்றுக்கு 15,000 அழைப்புகள் வருகின்றன. ஜப்பானில் விபத்து நடைபெற்ற 13ஆவது நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வருகின்றன. அதேபோல தமிழ்நாட்டில் அழைப்பு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மாநகராட்சிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராமப்புற பகுதிகளில் 13.5 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ்கள் சென்றடைகின்றன” என்று கூறினார்.

CAA அரசியல்: உள்ளே, வெளியே ஆட்டமாடும் எடப்பாடி, ஸ்டாலின்!!

108 ஆம்புலன்ஸ் சேவைக்காக இரண்டு மாதத்தில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் விஜயபாஸ்கர் தெரிவித்தார். “ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் ‘மேப்’ வசதியைப் போல் 108 ஆம்புலன்ஸ் சேவையிலும் வழங்கப்பட உள்ளது. அதற்கான ஆஃப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் எந்த இடத்தில் வருகிறது, எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை அறிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

அடுத்த செய்தி