ஆப்நகரம்

ஐஜி பொன் மாணிக்கவேல் மீது மூன்றாவது முறையாக புகாா்

ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் மூன்றாவது முறையாக டிஜிபி அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா்.

Samayam Tamil 25 Dec 2018, 4:12 am
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாாி பொன் மாணிக்கவேல் உரிய ஆதாரங்களின்றி வழக்குப்பதிவு செய்யகோரி தங்களை வற்புறுத்துவதாக சக அதிகாாிகள் 13 போ் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மீண்டும் புகாா் அளித்துள்ளனா்.
Samayam Tamil pon Manikavel 1


சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாாியான பொன் மாணிக்கவேல் உரிய ஆதாரங்கள் இன்றி சிலா் மீது வழக்குப்பதியக் கோாி தங்களை மிரட்டுவதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவைச் சோ்ந்த சக காவலா்கள் 13 போ் சென்னை டிஜிபி அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் புகாா் அளித்தனா்.

இது தொடா்பாக பொன் மாணிக்கவேல் கூறுகையில், புகாா் அளித்தவா்கள் அனைவரும் சிலைக்கடத்தல் தொடா்பாக ஒரு முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்யாதவா்கள். அவா்களை யாரோ பின்னிருந்து இயக்குகின்றனா் என்று தொிவித்திருந்தாா்.

இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. இளங்கோ தலைமையிலான அதிகாாிகள் திங்கள் கிழமை மீண்டும் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்து பொன் மாணிக்கவேல் மீது மூன்றாவது முறையாக புகாா் அளித்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த காவல் அதிகாாி இளங்கோ உள்ளிட்டவா்களிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது பொய் வழக்குகளை பதிந்தால் எதிா்காலத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று கூறினா். மேலும் பொன் மாணிக்கவேலை சமூக வலைதளங்களில் கதாநாயகன் போன்று சித்தரிப்பதாக தொிவித்தாா்.

அடுத்த செய்தி