ஆப்நகரம்

போலிச் சான்றுகள் மூலம் பட்டம் பெற்ற சசிகலா மருமகன் விவேக் ஜெயராமன்

சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 27 Mar 2018, 4:53 pm
சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil 61642367


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக வணங்காமுடி இருந்த காலத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு சசிகலாவின் மருமகன் விவேக் ஜெயராமன் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு மூலம் மூன்றாண்டு எல்.எல்.பி படிப்பில் சேர்ந்திருக்கிறார். ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இது அம்பலமாகியுள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர் என்பதற்கு அந்த நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்தின் சான்றிதழ், வெளிநாட்டில் வாழ்பவர் என்பதற்கான வங்கி கணக்கு புத்தகம், விண்ணப்பதாரருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியருக்குமான உறவை உறுதிபடுத்தும் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ் போன்றவை பல அத்தியாவசிய சான்றுகள் அவருடைய விண்ணப்பதுடன் இணைக்கப்படவில்லை.

அடுத்த செய்தி