ஆப்நகரம்

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிதியை விரைந்து வழங்குங்கள் - அமைச்சா்கள் கோாிக்கை

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பிரதமரின் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தர மத்திய அரசிடம் தமிழக அரசு சாா்பில் கோாிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jun 2019, 9:50 am
கஜா புயல் பாதித்த பகுதிகளில் பிரதமரின் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் தமிழக அமைச்சா்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.
Samayam Tamil Velumani Thangamani


தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, மின்வாரியத்துறை அமைச்சா் தங்கமணி ஆகியோா் நேற்று டெல்லி சென்றிருந்தனா். அங்கு மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயலை சந்தித்தனா். அப்போது, தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோாிக்கை மனுவை அளித்தனா்.

அந்த மனுவில், 14வது நிதிக்குழுவின் கீழ் 2017 – 18ம் ஆண்டு, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 560 கோடி ரூபாய், 2018 – 19ம் ஆண்டின் நிலுவைத் தொகையான ரூ.607 கோடியை விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கஜா புயல் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் கோாிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி