ஆப்நகரம்

நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் திட்டம்: செயற்பொறியாளர் பணியிட மாற்றம்

வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க எடுக்கப்பட்ட தெர்மாகோல் விவகாரத்தில் செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

TNN 23 Apr 2017, 7:31 pm
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க எடுக்கப்பட்ட தெர்மாகோல் விவகாரத்தில் செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil tn minister uses thermocol to cover dam to save water
நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் திட்டம்: செயற்பொறியாளர் பணியிட மாற்றம்


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து சுமார் 8 கிமீ தொலையில் உள்ளது வைகை அணை. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர்.

தற்போது வைகை அணையில் 23.10 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்நிலையில், வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க நீரின் மேற்பரப்பில் தெர்மாகோல் அட்டைகள் வைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டு தெர்மாகோல் அட்டைகளை வைகை அணையில் மிதக்க விட்டனர்.

ஆனால், அந்த அட்டைகள் சிறிது நேரத்திலேயே காற்றில் பறந்து கிழிந்தது. மேலும், பல அட்டைகள் கரை ஒதுங்கியது. இதற்கு பல தரப்புகளிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், வைகை அணையில் தெர்மாகோல் பரப்பிய விவகாரம் தொடர்பாக செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரியாறு பாசனக் கால்வாய் செயற்பொறியாளர் பொறுப்பில் இருந்து முத்துப்பாண்டியன் மாற்றப்பட்டுள்ளார். மேலும், தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயற்பொறியாளர் பதவிக்கு முத்துப்பாண்டியன் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி