ஆப்நகரம்

கச்சத்தீவை மீட்டெடுக்கும் வழக்கில் வருவாய்துறையும் இணைந்துள்ளது: அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை முல்லைப்பெரியாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீட்டெடுத்தார் தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து காவேரி மீட்டெடுத்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Samayam Tamil 23 Dec 2018, 10:59 pm
கச்சத்தீவைமீட்டெடுப்பதற்கான வழக்கில் தமிழக வருவாய் துறையும் இணைந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rb udhaya kumar


மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள 27 வார்டுகளின் வழியாக அதிமுக சார்பில் ஒராண்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.இதன் துவக்க விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது: ‘கச்சத்தீவைமீட்டெடுப்பதற்காக வருவாய் துறையும் இணைந்து வழக்குப் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடி உள்ளோம்பசுமை தீர்ப்பாயம் உயர் நீதிமன்றம் என பல்வேறு தீர்ப்புகள் வருகிறது அதை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளோம்.

தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை முல்லைப்பெரியாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீட்டெடுத்தார் தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து காவேரி மீட்டெடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பனை திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம். இந்த அரசை அடிமை அரசு என பலர் கூறி வருகின்றனர். இந்த அடிமை அரசால் இந்திய தேசத்தில் இருந்து எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை என்று கூறி கண்ணை மூடிக்கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர்’.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசினார்.

அடுத்த செய்தி