ஆப்நகரம்

சாரண சாரணியர் தலைவர் தேர்தல்: எச்.ராஜா படுதோல்வி

சென்னையில் இன்று நடைபெற்ற சாரண சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தலில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தோல்வி அடைந்தார்.

TNN 16 Sep 2017, 4:17 pm
சென்னையில் இன்று நடைபெற்ற சாரண சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தலில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தோல்வி அடைந்தார்.
Samayam Tamil tn scouts poll result h raja failes
சாரண சாரணியர் தலைவர் தேர்தல்: எச்.ராஜா படுதோல்வி


மெரினா கடற்கரை சாலையில் உள்ள சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலாவதி தலைமையில் வாக்குப்பதிவு நடந்தது. தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.

சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்கலாம். மொத்தம் 499 வாக்குகள் கொண்ட இத்தேர்தலின் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 10.20 மணிக்குத் தொடங்கியது.

இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு பா.ஜ.க.வின் எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நிறைவுற்ற உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எச்.ராஜா வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி வெற்றி பெற்றுள்ளார். தலைவர் பதவிக்கு பா.ஜ.க.வின் எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நிறைவுற்ற உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எச்.ராஜா தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த போது பாஜகவைச் சேர்ந்த மூன்று பேர் தேர்தல் அதிகாரியிடம் சென்று, தேர்தலை நடத்தக் கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். எச்.ராஜாவும் இந்த தேர்தல் செல்லாது வாக்குப்பதிவுக்குப் பின் என்று ஆவேசமாகப் பேசினார்.

அடுத்த செய்தி