ஆப்நகரம்

கொடைக்கானல், ஊட்டிக்கு இ-பாஸ் கட்டாயம், அரசு சொல்வது என்ன?

சுற்றுலா தலங்கள் சார்ந்து ஊரடங்கு தளர்வு என்ன சொல்கிறது என்பதை விவரமாக விளக்கும் செய்தித் தொகுப்பு...

Samayam Tamil 30 Aug 2020, 8:35 pm
ஊரடங்கு முறையில் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil கொடைக்கானல், ஊட்டிக்கு இ-பாஸ் கட்டாயம், அரசு சொல்வது என்ன?
கொடைக்கானல், ஊட்டிக்கு இ-பாஸ் கட்டாயம், அரசு சொல்வது என்ன?


இதற்கிடையே கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என மாநிலத்தில் உள்ள அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்வதைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும் என அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசு ஊரடங்கு தளர்வு குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகம், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், பெரிய அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றிற்குத் தடை நீட்டிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவைமட்டுமின்றி மதம் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த நிகழ்வுகள், ஊர்வலங்கள் உள்பட அனைத்து வகையான கூட்டங்களுக்கும் அமலில் உள்ள தடை தொடரும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் இபாஸ் ரத்து, பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி; ஆனா ஒரு கண்டிஷன்!

அதேபோல் போக்குவரத்தைப் பொறுத்தவரை மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்குள் ரயில் சேவைகள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளைத் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி காரணமாகச் சுற்றுலா செல்ல பலர் முயற்சி செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த தளர்வுகள் குறித்த உத்தரவில் சுற்றுலா செல்பவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து சட்ட வல்லுநர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிகபட்சம் திருப்பி அனுப்புவார்கள் எனக் கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி