ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 3-ல் கடையடைப்பு: தமிழக வணிகர்கள் சங்கம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிற ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

TNN 30 Mar 2017, 8:34 pm
சென்னை: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிற ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
Samayam Tamil tn traders associations supports farmers protest all shops will be closed on april 3rd
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 3-ல் கடையடைப்பு: தமிழக வணிகர்கள் சங்கம்


தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், தில்லியின் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 17-வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, விவசாயிகளில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வருகிற ஏப்ரல் 3-ம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வுரிமையை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வெள்ளையன் அறிவித்துள்ளார்.
TN Traders associations supports farmers protest: All shops will be closed on April 3rd

அடுத்த செய்தி