ஆப்நகரம்

வாகன வரி செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு, எப்போ வரை தெரியுமா?

வாகன ஓட்டிகள் வரிசெலுத்துவதில் சந்தித்த சிரமங்களை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

Samayam Tamil 15 May 2020, 5:15 pm
தமிழ்நாட்டில் பொது முடக்கம் காரணமாக மின்சார கட்டணம், வாகன வரி, வருமான வரி எனக் கட்டணங்கள், வரிகளைச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil வாகன வரி செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு எப்போ வரை தரியுமா?
வாகன வரி செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு எப்போ வரை தரியுமா?


இதன் காரணமாக அரசு மக்களுக்கு உதவும் வகையில் சில உதவிகளைச் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வாகன வரி செலுத்தும் கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

முன்பு காலாண்டு வரி செலுத்த மே 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் முழு ஆண்டு வரி செலுத்த ஏப்ரல் 10 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு சற்று நேரத்திற்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் கால அவகாசத்தை நீட்டிப்பதாகக் கூறியுள்ளது.

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு: டாஸ்மாக் வழக்கு நாளை ஒத்தி வைப்பு!

பொது முடக்கம் காரணமாக அரசு அளித்துள்ள அவகாசத்தில் மக்கள் தங்கள் வாகன வரியை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து அரசு கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி