ஆப்நகரம்

தொடர்ந்து 3வது முறையாக தமிழகம் முதலிடம்

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 3வது முறையாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

TNN 27 Nov 2017, 1:03 pm
உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 3வது முறையாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
Samayam Tamil tn wins award for organ donation for the third successive year
தொடர்ந்து 3வது முறையாக தமிழகம் முதலிடம்


டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான விருதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பும் (NOTTO) இணைந்து நடத்திய 8வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் இந்த விருது இன்று வழங்கப்பட்டது. மத்திய சுகாதரத்துறை இணையமைச்சர் அனுபிரியா பட்டேல் இந்த விருதை வழங்கினார்.



தமிழகத்தில் இதுவரை 1056 இறந்த கொடையாளர்களிடம் இருந்து 5933 முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் இந்த விருதை தொடர்ந்து கைபற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி