ஆப்நகரம்

கஜா புயலால் பாதித்த விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டி ஆலோசனை தரும் வேளாண் பல்கலைக்கழகம்!

கோவை: புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய உதவிகளை அளிக்க தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.

TIMESOFINDIA.COM 22 Nov 2018, 6:25 pm
புயலால் பாதித்த விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கஜா புயலால் தென்னை, நெல், வாழை ஆகிய மூன்றும் பலத்த சேதத்தைக் கண்டுள்ளன.
Samayam Tamil VC


எனவே உடனடியாக விவசாயத்துறை மூலம் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளோம். புயலால் 31 லட்சம் தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சில விழுந்த மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க இயலும்.

ஆனால் லட்சக்கணக்கான மரங்களுக்கு இது சாத்தியமில்லை. 5 ஆண்டுகளுக்கு குறைவான வளர்ச்சி கொண்ட மரங்களை சில கிளைகளை நீக்கிவிட்டு, மீண்டும் நட்டு உரிய பராமரிப்பு அளிக்கலாம். ஆனால் 30 முதல் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை உயிர்பிக்க இயலாது.

தொழில்நுட்ப ரீதியில், மைக்காரிஸா என்ற பூஞ்சை மூலம் மரங்களின் வேர்களை நன்கு வளர்க்க முடியும். 25 லட்சம் தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்ய 40 லட்சம் விதைகள் தேவை. இதற்கு தேவையான விதைகளுக்காக கர்நாடக அரசு, கேரளாவில் உள்ள மத்திய பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்திடம் கேட்டுள்ளோம் என்றார்.

பல்வேறு முறைகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேளாண் பல்கலைக்கழகம் முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டு வருகின்றன.

பழைய விதைகளைப் பயன்படுத்துவதால் மோசமான அறுவடையைத் தான் விவசாயிகள் பெற முடியும். எனவே நல்ல அறுவடையை கொண்டு வர, எங்களிடமுள்ள நல்ல பல்வேறு வகையான விதைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அடுத்த செய்தி