ஆப்நகரம்

நேற்று அழைப்பு; இன்று கண்டிப்பு - கமல்ஹாசன் விஷயத்தில் போக்கை மாற்றிய கே.எஸ்.அழகிரி!

கமல் ஹாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Feb 2019, 2:38 pm
டெல்லியில் நேற்று ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Samayam Tamil Kamal


அப்போது பேசிய அவர், கமல் ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். அவர் மதச்சார்பற்ற கொள்கை உடையவர். எனவே தனித்து போட்டியிடுவதால் மதச்சார்பற்ற வாக்குகள் தான் சிதறும் என்று கூறியிருந்தார்.

இது திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கமலை கே.எஸ்.அழகிரி வன்மையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவை கமல் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்திற்கு வரவில்லை.

இதுபோன்ற கருத்துகள் பாஜகவிற்கு உதவுமே தவிர, அவரது கொள்கைகளுக்கு உதவாது. எனவே அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எந்தவொரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி