ஆப்நகரம்

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 24ல் தொடக்கம்

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் தொடங்குவதாக, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

TNN 8 Jun 2016, 9:41 pm
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் தொடங்குவதாக, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tnea 2016 anna university to begin counselling on june 24
என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 24ல் தொடக்கம்


என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 24ம் தேதி முதல் தொடங்குவதாக, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் வரும் 20ம் தேதி வெளியிடப்படும் என்று அவர் கூறினார். இதன்படி, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24ம் தேதியும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 25ம் தேதியும் நடைபெறும் என்றும் கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி