ஆப்நகரம்

மழைக் காலத்தில் பாதுகாப்பாக இருக்க மின்சார வாரியத்தின் அறிவுரைகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மழைகாலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி விளக்கியுள்ளது.

Samayam Tamil 7 Oct 2018, 4:35 am
மழைக் காலங்களில் பாதுகாப்பாக இருப்பதற்கு பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வழங்கியுள்ளது.
Samayam Tamil OB-VZ037_ipower_G_20130114062801


இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மழைகாலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

செய்யவேண்டியவை: வீட்டில் மின் அமைப்பை சரிபார்த்து பழுதுநீக்கிவிட வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைக் கண்டால் உடனே மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கசிவு தடுப்பானை மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்த வேண்டும். உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை மாற்ற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச்சான்று உள்ள மின் சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். உபயோகத்தில் இல்லாத மின்சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும். மின்சாரத்தால் தீவிபத்து ஏற்பட்டால் உடனே மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை: மின்கம்பிகளில் துணிகளை உலர்த்தக் கூடாது. மின் கம்பங்கள் மற்றும் வேலிகள் அருகில் நிற்கவோ தொடவோ கூடாது. புதிதாக மின் வேலி அமைக்கக் கூடாது. மின் நிலைநிறுத்திகளை வெட்டவோ, சேதப்படுத்தவோ கூடாது. குளியல் அறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக் கூடாது, இடி அல்லது மின்னல் பலமாக இருக்கும்போது டிவி, மிக்சி, கிரண்டர், தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

அடுத்த செய்தி