ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2ஏ தேர்வு...!

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2ஏ தேர்வு நடைபெற்று வருகிறது.

TNN 6 Aug 2017, 11:15 am
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2ஏ தேர்வு நடைபெற்று வருகிறது.
Samayam Tamil tnpsc group 2a exams starts today
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2ஏ தேர்வு...!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏராளமான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அரசுப் பணிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 2,536 மையங்களில் நடைபெற்று வருகிறது. காலியாக உள்ள 1,953 பணியிடங்களுக்காக 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 5ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோட்டையை நோக்கி பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தால் சில ஆசிரியர் சங்கங்களும் தேர்வு பணியில் ஈடுபட போவதில்லை என்று தெரிவித்தன. இத்தகைய சூழலில் குரூப் 2ஏ தேர்வு இன்று சச்சரவின்றி நடந்து வருகிறது.

TNPSC Group 2A exams Starts today.

அடுத்த செய்தி