ஆப்நகரம்

‘குரூப் 4’ முறைகேடு விசாரணை தொடங்கியது!

'குரூப் 4' தேர்வு முறைகேடு குற்றச்சாட்டுத் தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்களைச் சென்னைக்கு நேரில் வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Samayam Tamil 13 Jan 2020, 11:55 am
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய 'குரூப் 4' தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் நிலவுகிறது.
Samayam Tamil 534410


தமிழ் நாட்டில் மொத்தம் 5ஆயிரத்து 575 மையங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர். அத்தேர்வு முடிவுகளில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இடங்களில் அமைக்கப்பட இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்கள்தான் முன்னிலை பெற்றிருக்கிறார்கள்.

குறிப்பாக, சமூக இட ஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியிருந்தவர்களாக இருக்கின்றனர்.

தங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு இனிப்பான செய்தி!

தரவரிசைப் பட்டியலில் (ரேங்க்) குறிப்பிட்ட இரண்டு மையங்களிலிருந்து தேர்ச்சி பெற்றவர்களே அதிக அளவில் இடம்பிடித்ததால், இந்த மையங்களில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனக் குற்றச்சாட்டுப் பரவலாக எழுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்வதற்காக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேரில் சென்று இரண்டு நாட்கள் முன் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சென்னையில் 35 தேர்வர்களிடம் காலை விசாரணை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், குறிப்பிட்ட மையங்களில்
தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்ற தேர்வர்களின் விடைத் தாள்களை விசாரணைக்கு உட்படுத்தியது.

அடேங்கப்பா இத்தனை லட்சமா?- வெறிச்சோடிய சென்னை; களைகட்டும் சிறப்பு பேருந்து வசதி!

இதைத்தொடர்ந்து இப்போது விசாரணை நடக்கிறது. இந்த விசாரணைக்காகத் தேர்வர்கள் தங்கள் சான்றிதழ் நகல்களையும் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விசாரணைக்கு ஆஜரான சிலர் ஊடகங்கள் முன் முகத்தை மூடிக் கொண்டனர். முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சிலர், மீண்டும் தேர்வெழுதத் தயார் எனக் கூறியுள்ள நிலையில், விசாரணையின் இறுதியில் என்ன நடந்தது என்பது தெரியவரும்.

அடுத்த செய்தி