ஆப்நகரம்

வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

இந்தியாவில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர் பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

TNN 19 Mar 2017, 11:40 am
துாத்துக்குடி: இந்தியாவில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர் பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
Samayam Tamil to ban coke pepsi in india ramadoss
வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்


தூத்துக்குடியில் பாமக நிறுவன ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும் போது, " தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க கோக், பெப்சி குளிர் பான ஆலைகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர் பானங்கள் விற்பனை செய்ய இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடாது. அ.தி.மு.க., பல கோஷ்டிகளாக போட்டியிடுகின்றார்கள். தீபாவின் கணவர் மாதவன் கட்சி ஆரம்பிப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. தாமிரபரணி . மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டும்.

இந்த பிரச்னை குறித்து பா.ம.க., தொடர்ந்த வழக்கு 9 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் மாரடைப்பால் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இது குறித்து கேட்பாரற்ற நிலை உருவாகியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
to ban coke , pepsi in india : ramadoss

அடுத்த செய்தி