ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 15 Jul 2020, 12:21 pm
கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சிபிஐ விசாரணை, கறுப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil Sathankulam Case update


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:


* கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

* கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து அளிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மின் கட்டணம் செலுத்த மறக்காதீங்க, லாஸ்ட் டேட்!

* வேலூர் மாவட்டத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,460ஆக உயர்ந்துள்ளது.

* தமிழ் கடவுள் முருகனைப் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சனம் செய்தவர்களை கண்டித்து வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

* மதுரையில் அமலில் இருந்த முழு ஊரடங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

காமராஜர் ஏன் கொண்டாடப்பட வேண்டும்? புகைப்படங்களுடன் விளக்கம்!

* மன்னார்குடி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ அம்பிகாபதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

* தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கஸ்டடி மரணத்தில் காவலர் முத்துராஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி