ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 23 Jul 2020, 10:11 am
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, கல்லூரி இறுதி தேர்வு ரத்து, சென்னையில் பிளாஸ்மா வங்கி, பல்வேறு மாவட்டங்களில் கனமழை உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே காணலாம்.
Samayam Tamil MK Stalin


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

’கோவாக்சின்’ தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது? - களமிறங்கிய தமிழ்நாடு!

* கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு, லட்சத்தீவு, தெற்கு கேரளா, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. இவை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களின் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

* தமிழகத்தில் தற்போது வரை அமைச்சர்கள் உட்பட 18 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

தமிழ்நாடு ராஜ் பவன்: 76 சிஆர்பிஃப் வீரர்களுக்கு கொரோனா!

* திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன்(50) கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.ரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். இதுதொடர்பான காணொலி காட்சி நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், 10 ஆண்டு காலத்தில் தமிழகம் எல்லா வகையிலும் பின்தங்கி விட்டது. இதிலிருந்து மீட்டெடுக்க தமிழகத்தில் திமுக ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

அடுத்த செய்தி