ஆப்நகரம்

’தமிழ்நாடு இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...!

இன்றைய நாளின் தமிழக அளவிலான முக்கியச் செய்திகள் பலவற்றின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் ’சமயம் தமிழ்’ உடன்...

Samayam Tamil 23 Jun 2020, 10:11 am
மதுரையில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு, முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை, தமிழகத்தில் உயரும் பலி எண்ணிக்கை, ஒருபக்கம் வாட்டி எடுக்கும் வெயில் உள்ளிட்டவை முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே சுருக்கமாக காணலாம்.
Samayam Tamil மதுரையில் ஊரடங்கு


தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்:

* அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும். அறிக்கைகளால் மக்களை குழப்புவது, அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறார். இதில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விரைவில் பலி 800ஐ தாண்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா பாதிப்பு பட்டியலில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி 62,087 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

* ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மதுரையில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதையொட்டி விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்கள் இன்று முதல் ரத்து. இதேபோல் தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி